உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.வெள்ளோட்டில் பாலகுருசாமி கோயிலில் குமரித் திருவிழா

ஆர்.வெள்ளோட்டில் பாலகுருசாமி கோயிலில் குமரித் திருவிழா

குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோடு ஊராட்சி நாராயணாபுரம் புதூர் பாலகுருசாமி கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தக்காவடி
எடுத்துவந்த பின்பு விழா துவங்கியது. இரண்டு நாள் விடிய விடிய நடக்கும் விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

வேண்டுதலை நிறைவேற்ற நேர்த்திக் கடன் செலுத்தினர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் நடந்தது.திருவிழாவில் ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி, கூம்பூர், ஈசநத்தம், பாளையம்,
குஜிலியம்பாறை உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழாவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திரளாக பங்கேற்பதால், குமரித்திருவிழா என்று அழைக்கப்படுகிறது. கோயில் நிர்வாகி பாலகுரு தலைமையில்
ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !