உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று வெங்கடாஜலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.பஞ்சவடியில் 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.மூலவர் ஆஞ்சநேயர் சன்னிதியுடன் ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி சன்னிதிகளும் அமைந்துள்ளன.தற்போது ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயரத்தில், 2 டன் வெங்கடாஜலபதி சிலை, திருமலையில் வடிவமைக்கப்பட்டு பஞ்சவடிக்கு எடுத்து வரப்பட்டது. பிரதிஷ்டையை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை துவங்கின. நேற்று காலை கோ பூஜை, மூல மந்திர ஹோமம், யந்திர பிரதிஷ்டை நடந்தது.வெங்கடாஜலபதி சுவாமி சிலையை பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியார் பிரதிஷ்டை செய்தார். பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ஆவதால், தற்போது திருப்பணிகள் நடக்கின்றன. ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !