பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2310 days ago
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்படட பத்ரகாளியம் மன் கோயில் திருவிழா நடந்தது. மே 7ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பூஜாரி அழைத்து வரப்பட்டு கருப்பண சாமிக்கு பூஜை நடந்தது.அம்மன் வாண வேடிக்கை, மேளதாளத்துடன் கோயிலில் எழுந்தருளினார். இரவில் முளைப்பாரி எடுக்கப்பட்டது.மே 8ல் மாவிளக்கு பொங்கல், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அன்று இரவு அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளினார். நேற்று (மே., 9ல்) குத்துவிளக்கு பூஜை நடந்தது. உற்ஸவ விருந்து நடந்தது. மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.