சிவலோகநாதர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2345 days ago
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், மழை பெய்யாமல் வறட்சியாக காணப்படுகிறது. இந்நிலையில், மழை பெய்ய வேண்டி, கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்று முன் தினம் யாக பூஜை நடந்தது.இதில், பொன்மலை வேலாயுதசாமி கோவில் அறங்காவலர் சண்முசுந்தரி மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.