உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக விழா

பழநியில் வைகாசி விசாக விழா

 பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோவிலில், வைகாசி விசாக விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 21 வரை நடக்கிறது.

வசந்த உற்சவ விழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோவிலில் நேற்று காலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமும், கொடி மரத்திற்கு கும்ப கலச அபிஷேக பூஜையுடன் கொடியேற்றம் நடந்தது.வரும், 17 இரவு முத்துக் குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 18ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோவில் நடை அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும். அன்று மாலை பெரிய நாயகியம்மன் கோவில் ரத வீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்க குதிரை வாகனங்களில் உலா வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !