வேணுகோபால சாமி கோயிலில் வைகாசி வசந்த விழா
ADDED :2389 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் உள்ள வேணு கோபால சாமி கோயிலில் வைகாசி வசந்தவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது. பதினோரு நாட்கள் நடக்கும் விழாவில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஊர்வலமாக வந்து அருள்பாலிப்பார். ஆறாம் நாள் விழாவாக திருக்கல்யாணம் மாலை நடக்கும். திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடியாரின் சிறப்பு பூஜைகள் சாமிக்கு நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.