சின்னாளபட்டி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :2338 days ago
சின்னாளபட்டி: ஏ.வெள்ளோடு அருகே பாப்பனம்பட்டியில், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கரகம் அழைப்பு சிறப்பு பூஜைகளுடன், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. ஆன்மிக கலைநிகழ்ச்சி, வாணவேடிக்கை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.