கசவனம்பட்டி அருகே மாரிமுத்து சுவாமி கோயிலில், திருவாசகமுற்றோதல்
ADDED :2703 days ago
கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நடந்தது.
முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருவாசக பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.