உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை, ஒத்தக்கடை யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் அக்னி மூலம் கூட்டு வழிபாடு

மதுரை, ஒத்தக்கடை யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் அக்னி மூலம் கூட்டு வழிபாடு

மதுரை: மதுரை, யானை மலை ஒத்தக்கடை, யோக நரசிங்கப் பெருமாள் கோவில் எதிரில், 17.05.2019 வெள்ளிக்கிழமை நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மழை வேண்டி அக்னி மூலம் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. நிகழ்ச்சி நிரல்காலை  : 08.00 மணிக்கு புன்னியாக வாஸநம்,காலை  : 09.00 மணிக்கு மகாஸங்கல்பம்காலை  : 09.30 மணிக்கு மகாயாகம் தொடக்கம்மதியம் : 12.10 மணிக்கு மகாபூர்ணாஹுதி தொடர்ச்சியாக மஹா அபிஷேகம்மதியம் : 02.00 மணிக்கு திருவாராதனம் மரியாதை. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் செய்து வருகிறது. இந்த டிரஸ்ட் மூலம் தினசரி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்திற்கு பக்தர்கள் நன்கொடை அளித்து உதவலாம்.தொடர்புக்கு: 98420 24866, 87780 34151


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !