மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2332 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2332 days ago
மேலுார்:மேலுார் அருகே திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா மே 9 கொடி ஏற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரில் இருந் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்மனுடன் திருமறைநாதர் மேலுாருக்கு பல்லக்குகளில் எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சுவாமியை வரவேற்றனர்.மேலுார் நுழை வாயிலில் தாசில்தார் சிவகாமிநாதனுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு மாங்கொட்டை திருவிழா நடந்தது. இவ்விழாவில் மே 16 அம்மன்-சுவாமி திருக்கல்யாணம், 17 தேரோட்டம் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
2332 days ago
2332 days ago