நோயின்றி நீண்டநாள் வாழ என்ன ஸ்லோகம் சொல்லலாம்?
ADDED :2361 days ago
“பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே”
என்னும் திருநாவுக்கரசரின் பாடலை பாடினால் ஆரோக்கியம் மேம்படும். நூறாண்டு காலம் வாழலாம்.