உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வேங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வாலாஜாபாத் : ஊவேரி கிராமத்தில் சித்தி விநாயகர் மற்றும் வேங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபரம் அடுத்த ஊவேரி கிராமத்தில் சித்தி விநாயகர் மற்றும் வேங்கையம்மன் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், கோபூஜை, தனபூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பூஜைக்குப்பின், சலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீவேங்கையம்மன் சன்னிதி விமானங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9 மணிக்கு மலர் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !