திரவுபதி அம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED :5043 days ago
கடலூர் :கடலூர் பாதிரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (12ம் தேதி) காலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், மாலை 5 மணி முதல் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. நாளை (13ம் தேதி) காலை 8 மணி முதல் இரண்டாம் காலயாக சாலை பூஜைகள், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலயாக சாலை பூஜை, இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. 14ம் தேதி காலை 6.30 மணி முதல் நாடி சந்தானம், தீபாராதனை, 9.30 மணிக்கு யாத்ராதானம், 10 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 10.10க்கு விமானங்களுக்கும், 10.20க்கு மூலவர் மற்றும் பரிகார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.