உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவினன்குடி பெயர்காரணம்!

ஆவினன்குடி பெயர்காரணம்!

பழநியின் புராணப் பெயர் திருஆவினன்குடி. இதற்கான காரணம் தெரியுமா!

●  மகாவிஷ்ணுவைப் பிரிந்து பூலோகம் வந்த மகாலட்சுமி மன ஆறுதல் பெற, பழநியில் தங்கி முருகனை வேண்டினாள்.
●  ஆணவத்தால் தன் சக்தியை இழந்த தெய்வப்பசுவான காமதேனு பழநியில் தவமிருந்து பலம் பெற்றது.
●  தன்னால் தான் உலகமே இயங்குகிறது என்று கர்வப்பட்ட சூரியனை சபித்தார் சிவன். இதிலிருந்து விடுபட பழநி முருகனைச் சரணடைந்தார் சூரியன்.  
●  பார்வதியின் தந்தையான தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகன் சிவனை அழைக்கவில்லை. சிவனை மதிக்காத யாகத்தில் பங்கேற்ற அக்னிபகவான் ஒளியிழந்தார். பின்னர் பழநி முருகனை வழிபட்டு பலன் பெற்றார்.  
●  பழநி முருகனின் மகிமை அறிந்த பூமாதேவி இத்தலத்தில் தங்கி வழிபட்டாள்.
மகாலட்சுமியாகிய ’திரு’, காமதேனுவாகிய ’ஆ’, ’இனன்’ என்று பெயர் கொண்ட சூரியன், பூமாதேவியாகிய ’கு’, அக்னியாகிய ’டி’ ஆகியோர் வழிபட்டதால் இத்தலம் இவற்றின் பெயரால் ’திருஆவினன்குடி’ எனப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !