உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு கட்ட ஆசையா...

வீடு கட்ட ஆசையா...

சொந்தமா வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது! ’ஆனை அசைஞ்சு தின்னும்; வீடு அசையாமல் தின்னும்’  ’வீடு கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார்!! என்றெல்லாம் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர். வீடு கட்ட தொடங்கும் பலர், “பணம் புரட்ட படாதபாடு பட்டேன். இந்த வேலை எப்பதான் முடியுமோ தெரியலை!’ என புலம்பும் அளவுக்கு நெருக்கடியை சந்திப்பதுண்டு.

பிரச்னை ஏதுமின்றி  நல்ல முறையில் வீடு கட்டி, பால் காய்ச்ச பரிகாரம் இருக்கிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மீது ஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடலை தினமும் காலை (அ) மாலையில் 12 முறை பாராயணம் செய்யுங்கள். திங்கட்கிழமையில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்யுங்கள்.

இதோ தடை நீக்கும் பாடல்:

நன்றுடையானை தீயது இலானை நரை  வெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானை
சென்று அடையாத திருவுடையானை சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !