மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
ADDED :2337 days ago
காரமடை: காரமடை தெப்பக்குளம் மாகாளியம்மன் திருக்கோவில், 96ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா சிறப்பாக நடந்தது.
காரமடை தோலம்பாளையம் ரோட்டில் தெப்பக்குளம் மாகாளியம்மன் கோவில் நுாற்றாண்டு பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு, 96 வது பூச்சாட்டு திருவிழா 23.04.2019 அன்று பூச்சாட்டுடன் துவங்கி, அன்றாடம் சிறப்பு அபிஷேகம், சக்திகரகம் அழைப்பு,பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அலகு குத்தி தேர் இழுத்தல், அம்மன் திருவீதி உலா போன்ற நிகழ்ச்சி நடைபெற்று நேற்று மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், மற்றும் அருள்மிகு மாகாளியம்மன் வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.