உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீங்களே முடிவு செய்யுங்கள்

நீங்களே முடிவு செய்யுங்கள்

விதை நெல்லுடன் வயலுக்குப் புறப்பட்டான் விவசாயி ஒருவன். வழியில் பாறைப்பகுதியில் சில விதைகள் சிந்தின. சற்று தூரம் கடந்ததும், முள்செடிகள் அடர்ந்த புதரில் சில விழுந்தன. பாறையில் வேர் விட முடியாததால் சிறிது முளைத்த பிறகு கருகி விட்டன. புதரில் விதை முளைத்தாலும், செல்ல முடியாதபடி முள்செடிகள் தடையாகவும் இருந்தன. அதுவும் பலனளிக்கவில்லை. வயலில் இட்ட விதைகள் மண்ணின் தரத்துக்கு ஏற்ப 30 மடங்கு, 60 மடங்கு, நூறு மடங்கு என பலன் அளித்தன.   இது போலவே மகான்கள் கருத்துக்களை சொல்கிறார்கள். அதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் நூறு சதவீத விளைச்சல் தரும் நிலத்துக்கு சமமானவர்கள்.  மற்றவர்கள் அவரவர் திறனுக்கேற்ப 60, 30 மடங்கு விளைச்சல் தரும் நிலத்திற்கு ஒப்பாவர்.  நல்லதைக் கேட்டும் பின்பற்றாதவர்கள் புதரில் விளைந்த பயிர்களைப் போன்றவர்கள். கேட்க மறுத்தவர்கள் பாறை விதைகளுக்கு ஈடானவர்கள். நீங்கள், யார் என்பதை முடிவு செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !