உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை ரங்கநாதர் கோவிலில் சுக்ல பட்ச ஏகாதசி வைபவம்

காரமடை ரங்கநாதர் கோவிலில் சுக்ல பட்ச ஏகாதசி வைபவம்

காரமடை:விகாரி ஆண்டின் ரிஷப மாதமாகிய வைகாசி சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி காரமடை அரங்கநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.


மூலவரான ரங்கநாதருக்கு அதிகாலையில் கோ பூஜை ,கோ தரிசனம் ,மூலவருக்கு திருமஞ்சனம் முடிந்து, கால சந்தி பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க தேவியரோடு எழுந்தருளுவிக்கப்பட்ட உற்சவர், கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பின்னர் ஆஸ்தானத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சாற்றுமுறை சேவித்து, சுக்லபட்ச ஏகாதசி வைபம் நிறைவடைந்தது. வைகாசி மாத முதல் ஏகாதசி என்பதால் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !