உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால ஸ்வாமி கோவிலில் கொடியேற்றம்

ராஜகோபால ஸ்வாமி கோவிலில் கொடியேற்றம்

மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் நேற்றுக்காலையில் ஒன்பது மணியளவில் பங்குனி பெருவிழா முன்னிட்டு, "துவஜா ரோகணம் என்னும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெருமாள் தாயாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பிரம்ம உற்சவ திருவிழா, கொடியேற்றம் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கணேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து, ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமி அலங்காரம் செய்யப்பட்டு, இரவு எட்டு மணியளவில் கொடிச்சப்பரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமாள் ஸ்வாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !