காமன் கோவில் திருவிழா
ADDED :4986 days ago
கிள்ளை :கிள்ளை மீனவர் காலனி யில் காமன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு வாணவேடிக்கை, கரகாட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு காமன் எரிப்பு விழா நடந்தது. கிள்ளை மீனவர் காலனி, சின்னவாய்க்கால், பில்லுமேடு உள்ளிட்ட சுற்றுப் பகுதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.