உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா

இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா

புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், 33ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 10:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:00 மணிக்கு சூர்ணோத்சவம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, இந்திர விமானத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. இதில், விழா உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை(18ம் தேதி) காலை 7:45 மணிக்கு திருத்தேர் புறப்பாடு, தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !