உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தினவிழா

செஞ்சி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தினவிழா

செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா நடந்தது.செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2015ம் ஆண்டு புதிதாக ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இதன் நான்காம் ஆண்டு விழா நடந்தது.அதனையொட்டி காலை 7:00 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து விசேஷ ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும்; மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !