குதிரைச்சந்தல் சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி குதிரைச்சந்தல் பகுதியில் ஷீரடி சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 16ல்) நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் குதிரைச்சந்தில் பகுதியில் ஷீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வேதசிவாகம முறைப்படி இரண்டு நாட்கள் நடந்தது.அதனையொட்டி மும்பையிலிருந்து கொண்டு வரப்பட்ட பாபா சிலை நேற்று முன்தினம் (மே., 15ல்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக யாகம், யாகசாலை பிரவேசம் நடந்தது.நேற்று (மே., 16ல்) அதிகாலை, விநாயகர் வழிபாடு, கோ பூஜை, சூரிய பூஜைகளுக்குப்பின் யாகம் நடந்தது. பின்னர் காலை 9:00 மணியிலிருந்து 10:30 மணிக்குள், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து
மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி குருமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் குழுவினர் கும்பாபிஷேக வழிபாடுகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள்
சுவாமி தரிசனம் செய்தனர்.