கடலூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2492 days ago
கடலூர்: மாலுமியார்பேட்டை வெற்றி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கடலூர் துறைமுகம் மாலுமியார்பேட்டை துறைமுகம் நகர் வெற்றி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழா, கடந்த 15ம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
நேற்று (மே., 15ல்) காலை 2ம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து கடம் புறப்பாடு செய்து, காலை 10 மணிக்கு கோவில் கலசம் மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.