உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விழா

மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விழா

மந்தாரக்குப்பம்: புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (18ம் தேதி) நடக்கிறது.மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில்,
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, நாளை (18ம் தேதி) காலை 9:00 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி
அம்மன் கோவில் அன்னதான குழுவினர் மற்றும் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !