உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை : வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திகேஷ்வரருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

மதுரை,  தும்பைப்பட்டி, சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நேற்று வைகாசி  மாத  வளர்பிறை பிரதோஷ   சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர்,  கரும்புச் சாறு  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  பக்தர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், நந்தி தேவரின் கவசம் பாராயணம் செய்தனர்.  அனைவருக்கும் அன்னதானம், பாயாசம்,  பிரசாதம் வழங்கப்பட்டது.  சங்கர லிங்கம் சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.  ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !