லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் திருவிழா
ADDED :2494 days ago
கூடலூர்:லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது.முதல்நாள் குறுவனத்தில் உள்ள பகவதி அம்மனை லோயர்கேம்பிற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாவது நாள் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.மூன்றாம் நாளில் மீண்டும் அம்மன் குறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து லோயர்கேம்பில் இருந்து குறுவனம் வரை ஊர்வலமாக சென்றனர். கலைநிகழ்ச்சி மற்றும் கரகாட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.