நெட்டப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :2489 days ago
நெட்டப்பாக்கம்: பள்ளிச்சேரி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. மதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பள்ளிச்சேரி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில்
தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 15ம் தேதி மதியம் பகாசூரனுக்கு அன்னம் படைத்தல், மாலை திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று
முன்தினம் (மே., 16ல்) அரவாண் தேரோட்டம் நடந்தது. நேற்று (மே., 17ல்)மதியம் அரவாண் களப்பலியும், பின் திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை
செலுத்தினர்.