உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டமங்கலம் பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கண்டமங்கலம் பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நேற்று (மே., 17ல்) நடந்தது.

கண்டமங்கலம் முத்துமாரியம்மன், தண்டுமாரியம்மன் கோவில்களுக்கு மேற்கே உள்ள ஸ்ரீபொறையாத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நேற்று (மே., 17ல்) நடந்தது. விழாவை யொட்டி காலை 7.00 மணிக்கு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. மாலை 6.00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கண்ட மங்கலம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !