உடுமலை உச்சிமாகாளியம்மன் கோவிலில், திருவிழா துவக்கம்
ADDED :2482 days ago
உடுமலை:மடத்துக்குளம், அரியநாச்சிபாளையத்தில் உச்சிமாகாளியம்மன் கோவிலில், திருவிழா, 13ம்தேதி விநாயகர் பொங்கலுடன் துவங்கி, 14ம்தேதி துர்க்கை அம்மன் வேண்டுதலாக வடிசோறு செய்தல் நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று முன்தினம் (மே., 16ல்), உச்சிமாகாளியம்மன் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 21ம்தேதி, அமராவதி ஆற்றிலிருந்து, காலை, 10:00 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. வரும், 22 ம்தேதி, பூவோடு எடுத்தல், மாவிளக்கு மற்றும் பொங்கல் திருவிழா நடக்கிறது.