உடுமலை அமராவதி அம்மன் கோவில் திருவிழா
ADDED :2482 days ago
உடுமலை:உடுமலை, அமராவதி நகர், அமராவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது.இக்கோவிலில், திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, 15 நாட்களுக்கு, அம்பாளுக்கு, அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சக்தி கும்பம் மற்றும் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (மே., 16ல்) அதிகாலை, 5:00 மணிக்கு அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து அபிஷேக பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் பூவோடு எடுத்தல் நடந்தது. நேற்று (மே., 17ல்)அம்மன் திருவிதியுலா, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.