நெல்லிக்குப்பத்தில் கருடசேவை உற்சவம்
ADDED :2339 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. இரவு உற்சவர் வேணுகோபால் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கோவிலில் உற்சவர் வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.