உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சித்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த சித்தணி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.


திண்டிவனம் வட்டம், சித்தணி திரவுபதியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சாகை வார்த்தல் விழா, இரவு சுவாமி வீதியலா நடைபெற்றது.ஏழாம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 4 மணிக்கு அக்னி குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. மாலை 6.40 மணிக்கு சக்தி கரகம், காத்தவராயன் சுவாமிகள் தீ மிதித்ததை தொடர்ந்து, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.சித்தணி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !