உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மோற்சவத்தில் பக்தர்களை உபசரிக்கும் மடங்கள்: காஞ்சியில் 98 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பிரம்மோற்சவத்தில் பக்தர்களை உபசரிக்கும் மடங்கள்: காஞ்சியில் 98 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

காஞ்சிபுரம்: வரதர் கோவில் பிரம்மோற்சவத்திற்கு வரும், வெளியூர் பக்தர்கள், 10 நாட்கள் தங்குவதற்கும், உணவு உபசரிப்புக்கான ஏற்பாடுகளையும், காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான மடங்கள் மற்றும் தர்ம சத்திரங்கள், 98 ஆண்டுகளாக செய்து வருகின்றன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள், நடைபெறுகிறது.10 நாள் உற்சவம்இந்த உற்சவத்தை காண வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், பஜனை கோஷ்டியினரும் காஞ்சிபுரம் வருகின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்களில் பலர் தங்களது உறவினர் வீடுகளிலும், தனியார் தங்கும் விடுதிகளிலும் தங்கி செல்கின்றனர்.இருப்பினும், உற்சவம் நடைபெறும், 10 நாட்களும் இலவசமாக தங்கு வதற்கும், உணவு உபசரிப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் என்றே, வரதராஜ பெருமாள் கோவிலைச் சுற்றி, 12க்கும் மேற்பட்ட பழமையான மடங்கள், தற்காலிக மண்டபங்கள் உள்ளன.இங்கு, வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அனைவருக்கும், தலைவாழை இலையில், கூட்டு, பொறியல், அவியல் போன்ற பதார்த்தங்களுடன், உணவு பரிமாறி உபசரிக்கின்றனர். மேலும், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கும் இடவசதி செய்துள்ளனர்.

இது குறித்து, கரசங்கால் ததியாராதன அன்ன தானம் டிரஸ்டி, ஜானகி ராகவன் கூறியதாவது:எங்கள் டிரஸ்ட் சார்பில், 98வது ஆண்டாக, திருமண மண்பத்தை வாடகை எடுத்து, பக்தர் களை உபசரித்து, உணவு வழங்கி வருகிறோம்.ஜூலை 1க்கும் ஏற்பாடுஇதில், கருடசேவை மற்றும் தேரோட்டத்தின் போது, பக்தர்களுக்கு வடை பாயசத்துடன் விருந்து வழங்குகிறோம்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கூரம் சேஷாத்ரி அதிதி சத்காரம் கூறியதாவது: அதிதி சத்காரம் என்ற பெயரில், சன்னிதி தெருவில், காலையும், மாலையும் பக்தர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். ஜூலை 1ல் நடைபெறும், அத்திவரதர் உற்சவத்தை காண வரும் பக் தர்கள் இலவசமாக தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !