மாடம்பாக்கம் கோவிலில் சிறப்பு லட்சார்ச்சனை
ADDED :2337 days ago
தாம்பரம்: மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில், சரபேஸ்வரர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு லட்சார்ச்சனை, நேற்று நடந்தது. சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில், பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரக, நாக தோஷம் உள்ளோர், இந்த கோவில் துாணில் உள்ள, சரபேஸ்வரரிடம் வேண்டிக் கொள்கின்றனர். சரபேஸ்வரரின், 14வது ஆண்டு ஜெயந்தி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக, நேற்று காலை, 5:00 மணி முதல், கோ பூஜை, கலச பிரதிஷ்டை, கணபதி, நவக்கிரக, வாஸ்து, லட்சுமி, சரபேஸ்வரர், பிரத்யங்காரா உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. காலை, 11:00 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி நடந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.