காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வர் கோவிலில் தேர் திருவிழா
ADDED :2381 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அனந்தீஸ்வர் கோவிலில் நடைபெறும் வைகாசி விசாகபெருவிழாவையொட்டி தேர் திருவிழா நடந்தது.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடி சவுந்திரநாயகி உடனுறை அனந்தீஸ்வரன் திருக்கோவி லில் வைகாசி விசாக விழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய விழாவான தேர் திருவிழா 17 ம் தேதி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் பகல் 12 மணிக்கு நிலைக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மதனா, தக்கார் சீனிவாசன், மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.