உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்

மந்தாரக்குப்பம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேவி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு 1,008 குடம் நீர், பால் அபிஷேகம் நடந்தது.

வைகாசி விசாகம் மற்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே., 18ல்) காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, தேவி மாரியம்மனுக்கு 1,008 குடம் நீர் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது.உலக நன்மை மற்றும் மழை வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள், குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !