காஞ்சிபுரத்தில் குடையழகு கண்காட்சி
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கருட சேவையை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில், குடைகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், மேற்கு ராஜவீதியில், ஆண்டு தோறும்,
வரதராஜபெருமாள் கோவில் கருட சேவை திருவிழாவை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி வைக்கப்படும்.
அந்த வகையில், ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில், நேற்று முன்தினம் (மே., 18ல்) இரவு, காஞ்சிபுரம் குடையழகு என்ற தலைப்பில், கண்காட்சி துவக்கப்பட்டது. வரும், 23ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து, ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நிறுவனர், பேராசிரியர், பா.அண்ணாதுரை கூறியதாவது: பண்டைய காலத்திலேயே, குடைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். ஆங்கிலேயர், பிரான்ஸ், இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பலர், குடைகள் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளன.அந்த காலம் முதல் இந்த காலம் வரை,
பலரும் பயன்படுத்திய குடைகளை, கண்காட்சியில் வைத்துள்ளோம்.குடைகள், அதிகாரமாக இருப்பதையும், அதை வைத்திருப்போர் மதிப்புமிக்கவராகவும் இருப்பதை, இங்குள்ள
படங்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில், கருட சேவையின் போது, இரு குடையின் நடுவில் பவனி வரும் வரதரை காண்பதே அழகு தான்.இவ்வாறு, அவர் கூறினார்.