படுநெல்லி கங்கையம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா
ADDED :2333 days ago
படுநெல்லி: காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் நடக்கும் கூழ்வார்த்தல் விழா, நேற்று (மே., 19 ல்) நடைபெற்றது.மதியம், 1:00 மணிக்கு, கங்கையம்மனுக்கு கூழ்வார்க்கப்பட பின், பெண்கள், அம்மனை தரிசித்தனர்.