கோத்தகிரி பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி : கோத்தகிரி காம்பாய் கடை ஹேப்பி வேலி பகுதியில் அமைந்துள்ள, மாரியம்மன் கோவிலில் கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.முக்கிய திருவிழா நாளான நேற்று (மே., 19ல்) காலை, 7:00 மணிக்கு,அபிஷேக அலங்கார பூஜை, 9:00 மணிக்கு, மகளிர் குழுக்களின் தலைமையில், கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு கன்னிமார் பூஜை, கும்மி பாட்டு நிகழ்ச்சி இடம் பெற்றது. பகல், 12:30 மணிக்கு, பச்சை மரத்தையன் பூஜையை தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, பூ குண்டம் நடந்தது. மாலை, அம்மனின் புஷ்ப பல்லக்கு திருவீதி உலா நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று (மே., 20ல்) காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியை தொடர்ந்து,மாலை, 5:00 மணிக்கு, அம்மனை ஆற்றங்கரைக்கு வழியனுப்பி, பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை (மே., 20ல்) மறுபூஜையுடன், விழா நிறைவடைகிறது.