கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தேரோட்டம்
ADDED :2330 days ago
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தல வாடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரத்தில் துவங்கியது. பக்தர்கள் தண்ணீர் கொண்டு வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வந்தனர். நேற்று
(மே., 19ல்)காலை, 11:30 மணியாளவில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். பின், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.