குளித்தலை செல்லாண்டியம்மன் கோவிலில் 8ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED :2330 days ago
குளித்தலை: மேட்டு மருதூர் செல்லாண்டியம்மன் கோவிலில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.
குளித்தலை அடுத்த, மேட்டு மருதூரில், இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில், இயங்கிவரும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று (மே., 19ல்) நடந்தது. பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். அதன் பின், யாகசாலையில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், கோவில் அலுவலர்கள் புரவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.