சேலம் நரசிம்ம ஜெயந்தி கொண்டாட்டம்
ADDED :2332 days ago
சேலம்: சேலம், கருப்பூர் இஸ்கான் கோவிலில் நடந்த நரசிம்மர் ஜெயந்தி கொண்டாட்டத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் சார்பில், நரசிம்மர் ஜெயந்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள, இஸ்கான் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சேலம், கருப்பூர் இஸ்கான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை ஒட்டி, பஜனை, சிறப்பு அபிஷேகம், நரசிம்மர் உபன்யாசம், நாடகம் ஆகியன நடந்தன. திரளாக பக்தர்கள், நரசிம்மரை வழிபட்டனர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கருப்பூர் இஸ்கான் கோவில் பொறுப்பாளர் ஸ்ரீனிவாச கிருஷ்ணதாஸ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.