உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா

மோகனூர் புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா

மோகனூர்: மோகனூர் புதுத்தெரு, புனித செபஸ்தியார் ஆலயத்தில், ஆண்டுதோறும், தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, வரும், 26ல் துவங்குகிறது. அன்று மாலை, 6:30 மணிக்கு, பங்கு தந்தை பிரகாஷா தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. 27 மாலை, 6:30 மணிக்கு, வணக்க நாள் நிகழ்ச்சி. மே, 28 காலை, 10:30 மணிக்கு, சேலம் மாவட்டம், ஓமலூர் புனித ஜான் பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதல்வர் செபாஸ்தியான் தலைமையில் திருவிழா திருப்பலி. மாலை, 5:00 மணிக்கு, பொங்கல் மந்திரிப்பு, 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனிதர் திருவீதியுலா வருகிறார். பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், புனிதரை வணங்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !