கிருஷ்ணகிரி புஷ்பகிரி தூய மலர்மலை மாதா திருத்தல தேர்பவனி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம், புஷ்பகிரி தூய மலர் மலை மாதா திருத்தலத்தின் பெருவிழா கடந்த, 12ல் ஜெபமாலை, கொடிபவனி, கொடியேற்றம், திருப் பலியுடன் துவங்கியது.
பின்னர், 13 முதல், 17 வரை தினமும் மாலை, 6:00 மணிக்கு ஜெபமாலை, தேர்பவனி, திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் (மே., 19ல்) காலை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையில் திருத்தல பெருவிழா திருப்பலி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, காவேரிப்பட்டணம் பங்கு தந்தை தேவசகாயம் மற்றும் மறை மாவட்ட குருக்கள் தலைமையில், திருப்பலி, தேர் மந்தரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆடம்பர தேர்பவனி பங்கு ஆலயத்தை நோக்கி சென்றது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று (மே., 20ல்) மாலை, நன்றி திருப்பலியுடன், கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.