வசந்த மண்டபத்தில் உலகளந்தவர் தரிசனம்
ADDED :2378 days ago
காஞ்சிபுரம்: வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உலகளந்த பெருமாள், தேவியருடன் குளக்கரை அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும், உலகளந்த பெருமாள் கோவிலின் வசந்த உற்சவம், ஆண்டுதோறும் கோடையில் துவங்கும். இந்த உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. கோவில் குளக்கரை அருகே அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் எழுந்தருளியுள்ளார். தினமும் காலை, மண்டபத்தில் யாகத்துடன் பூஜை நடைபெறுகிறது. இவ்விழாவின் கடைசி நாளான, வரும் சனிக்கிழமை தீர்த்த வாரி நடைபெறுகிறது. அன்று மாலை, பெருமாள் ராஜவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.