உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்றிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

புதுச்சேரி, திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், 33ம் ஆண்டு மகோற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, தினமும் காலையில் சிறப்பு அபிேஷகமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாaமி வீதியுலா நடந்து வருகிறது. உற்சவத்தின் ஒருபகுதியாக நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் திரிபுரசுந்தரி மற்றும் வேதபுரீஸ்வரர் ஊஞ்சலில் அமர்ந்தபடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !