உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர் பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஓசூர்: கெலமங்கலம், பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் (மே., 20ல்)துவங்கியது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, பூ அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (மே., 21ல்) காலை, 8:45 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஒன்பது கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. தளி எம்.எல்.ஏ., பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமச்சந்திரன், முரளிதரன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊரில் ஊர்வலமாக சென்றனர். இரவு, 9:00 மணிக்கு நாட்டியாஞ்சலி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (மே., 22ல்) மதியம், 3:00 மணிக்கு சிடி திருவிழா, இரவு, 8:00 மணிக்கு பட்டாளம்மன் பூ பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !