கரூர் முனியப்பன் கோவில் திருவிழாவில் ஆட்டின் ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி
ADDED :2327 days ago
கரூர்: வாங்கல் அருகே நடந்த, ஆடு ரத்தம் குடிக்கும் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வாங்கல் முனியப்பனூரில், 36வது ஆண்டு முனியப்பன் கோவில் திருவிழா கடந்த, 20ல், காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு செல்லும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று
(மே.,21ல்) காலை, 11:00 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆட்டின் ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் கொண்டு சென்ற, 100க்கும் மேற்பட்ட ஆடுகளின் கழுத்தை கடித்து, பூசாரி பழனியப்பன் ரத்தம் குடித்தார். பிறகு, முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மஹா தீபாராதனை நடந்தது.