கரூர் வைகாசி திருவிழா முன்னிட்டு பூத வாகனத்தில் அம்மன் உலா
கரூர்: மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பூத வாகனத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.
கரூர், மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா, கடந்த, 12ல், பாலம்மாள்புரத்திலிருந்து கம்பம் எடுத்து வந்து துவங்கியது. அன்று மாலை, அமராவதி ஆற்றில் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவிலில் கம்பம் நடப்பட்டது. கடந்த, 17ல், பூச் சொரிதல், 19ல், காப்பு கட்டுதல், அன்று மாலை ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று (மே., 21ல்), பூத வாகனத்தில் அம்மன், வீதி உலா நடந்தது. இன்று (மே., 22ல்)வெள்ளி சிம்ம வாகனத்தில், அம்மன் வீதி உலா நடக்கிறது. வரும், 27ல், தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடுதல், வரும், 29ல் நடக்கிறது. வரும், 26 முதல், 29 வரை, பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னிச் சட்டி ஏந்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்துவர்.